பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேம்

913பார்த்தது
பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேம்
காங்கேயம் சிவன்மலை கிராமத்தில் உள்ள பெருமாள் மலை அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை நடைபெற்றது. யாகசாலை பூஜைகளுக்குப் பிறகு, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி