திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பேருந்து நிலையத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தருமன்(49) என்பவர் நேற்று திடீரென மயங்கி விழுந்தார். ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் திறந்து விடும்
வேலை செய்து வரும் இவர், சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் ஈரோடு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.