காங்கேயம் அருகே மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

959பார்த்தது
காங்கேயம் அருகே மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பேருந்து நிலையத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தருமன் (49) என்பவர் நேற்று திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் திறந்து விடும் வேலை செய்து வந்த இவர், சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் ஈரோடு செல்வதற்காக வெள்ளகோவில் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி