ஊதியூர் புன்னங்காலி வலசை அருகே சரண்யா(33) என்பவருக்குச் சொந்தமான நார் மில்லில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மில்லில் குவித்து வைக்கப்பட்டிருந்த நார் குவியலில் இருந்து புகை வந்து, பின்னர் தீ மளமளவெனப் பரவியது. பணியாளர்கள் அணைக்க முயன்றும் முடியவில்லை. உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது.