ஒரு வருடம் சாக்கடையை தூர்வாராக நகராட்சி நிர்வாகம்

5பார்த்தது
காங்கேயம் சத்யா நகரில் கடந்த ஒரு ஆண்டாக சாக்கடை தூர்வாரப்படாததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அடைத்து வழியும் வடிகால்களால் துர்நாற்றம், கொசுத் தொல்லை, தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகராட்சி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல், தோல் எரிச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். வடிகால் அமைப்பை உடனடியாக சுத்தம் செய்து, சாக்கடை நீர் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்றும், சாலை ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை சீர் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி