திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்த செல்வராஜ்(56) தனது குடும்பத்துடன் கணியூர் சென்றுவிட்டு திரும்பும்போது, தாராபுரம் திருப்பூர் ரோட்டில் ஊதியூர் அருகே நாட்டான்வலசு பகுதியில் கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் செல்வராஜ் பலத்த காயமடைந்தார். அவரது மனைவி காந்திமதி(44), மகன் பிரபாகரன்(26), தாயார் தங்கமணி(69) ஆகியோரும் காரில் இருந்தனர்.