திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆலாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையம் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் சென்னிமலை சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.