நாளை மின்தடை: காங்கேயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர்

2பார்த்தது
நாளை மின்தடை: காங்கேயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர்
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் டி. ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். காங்கயம் நகரம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் இந்த மின்தடை அமலில் இருக்கும்.