காங்கேயம் செல்போன் கடையில் கொள்ளை - காவல்துறை விசாரணை

2பார்த்தது
காங்கேயம் பேருந்து நிலையத்திற்குள் நகராட்சி வணிக வரி கடைகளில் கடை நடத்தி வரும் காஜாமைதீன் (38) என்பவரின் செல்போன் கடை பூட்டு உடைக்கப்பட்டு, சுமார் ₹1 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. கடப்பாரை போன்ற இரும்பு ராடு சம்பவ இடத்தில் கிடந்துள்ளது. கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளதால் கடையின் உள்ளே செல்லவில்லை என உரிமையாளர் தெரிவித்துள்ளார். 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பேருந்து நிலையத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் காங்கேயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு ப. பச்சாபாளையத்தில் உள்ள கோயில்களில் இருந்து ₹1.5 லட்சம் ரொக்கம் மற்றும் உண்டியல்கள் கொள்ளை போனதும் குறிப்பிடத்தக்கது.