நத்தக்காடையூரில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி

2பார்த்தது
காங்கேயம் நத்தக்காடையூர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 2ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான ஆண்கள், பெண்கள் 'A' கிரேடு கபடி போட்டி மாரியம்மன் கோவில் திடலில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. சர்வதேச போட்டிகளைப் போல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, மாநில அளவிலான நடுவர்களின் மேற்பார்வையில் போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் திருப்பூர் ஜெயசித்ரா அணி முதலிடத்தையும், கேரளா ஜேகே அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே அணி முதலிடத்தையும், சென்னை விஎம்டி அணி இரண்டாம் இடத்தையும் வென்றன. சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. 5000க்கும் மேற்பட்டோர் போட்டியை கண்டுகளித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ் மற்றும் பலர் போட்டியை தொடங்கி வைத்து வீரர்களை வாழ்த்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி