காங்கேயம் ஜி.எஸ். உடற்கல்வி கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டியை பல்கலைக்கழக விளையாட்டுச் செயலாளர் முனைவர் செல்வி லட்சுமி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜி.எஸ். உடற்கல்வி கல்லூரியின் முதல்வர் முனைவர் செல்வம் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.