காங்கேயம்: முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வைரல்

1068பார்த்தது
காங்கேயம் - தாராபுரம் சாலையில் பாரதியார் நகரில் வசித்துவருபவர் கண்ணன் (54) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணம், வெள்ளி குத்துவிளக்கு, பட்டுப்புடவை போன்றவற்றை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் (செப்.2) கொள்ளையடித்துச் சென்றனர். இதே போல் சக்தி நகரில் திவ்யா (36) என்பரின் வீட்டில் ரூ. 1 லட்சம் மற்றும் 1 பவுன் நகையும், இவரது வீட்டின் அருகே உள்ள பிரபாவதி என்பவரது வீட்டில் 7 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.

மேலும் சில வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற நிலையில், அன்று இரவே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 2 காவலர்கள் நேரில் வரவே கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கொண்டு கடப்பாரையை காவலர்களை நோக்கி வீசி தப்பி ஓடியுள்ளனர். மேலும் 3க்கும் மேற்பட்ட பேக்குகளை சக்தி நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து டிஐஜி சரவணா சுந்தர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தனிப்படை அமைத்து தீவிரமாக கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அதில், முகமூடி கொள்ளையர்கள் கையில் ஆயுதங்களுடன் சர்வசாதாரணமாக உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி