காங்கேயம்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

82பார்த்தது
காங்கேயம்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
காங்கேயம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காங்கேயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 45 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.