காங்கேயத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

1065பார்த்தது
காங்கேயத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
காங்கேயம் சட்டமன்ற தொகுதி, காங்கேயம் நகராட்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சி தமிழர் எடப்பாடி. கே. பழனிச்சாமி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். எஸ். என். நடராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் நகரக் கழகச் செயலாளர் வெங்கு ஜி மணிமாறன், நகர கழக பொருளாளர் கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் துரைசாமி, பாஜக மாவட்ட பட்டியலணி தலைவர் செந்தில்குமார் மற்றும் அதிமுக வார்டு செயலாளர்கள் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.