திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இன்று காலை, 3 1/2 வயது குழந்தை இரத்த வாந்தி எடுத்ததால், அவசர அவசரமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கத்தின் உதவியுடன், கொடுமுடி பிரீத்தி மருத்துவமனையிலிருந்து கோவை வரை போக்குவரத்து நெரிசல் இன்றி ஆம்புலன்ஸ் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கொடுமுடியைச் சேர்ந்த அஜித்குமார் ஓட்டிய ஆம்புலன்ஸுக்கு, காங்கேயம் பகுதி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து வழிவிட்டு உதவினர். இந்த மனிதாபிமான செயல் அனைவரையும் நெகிழச் செய்தது.