திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவில் சொரியங் கிணத்து பாளையத்தைச் சேர்ந்த குமரேசன், அவரது மனைவி சோபியா இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறில், சோபியா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சோபியாவை தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறப்படும் வழக்கில் கணவர் குமரேசனை வெள்ளகோவில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.