காங்கேயத்தில் போலீஸ் எனக்கூறி வழிப்பறி - வாலிபர் கைது

54பார்த்தது
காங்கேயத்தில் போலீஸ் எனக்கூறி வழிப்பறி - வாலிபர் கைது
காங்கேயம் அருகே சாவடிபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி நவீன்குமார்-30. இவர் படியூர் அருகே ஒட்டப்பாளையம் டாஸ்மாக்கடை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மற்றொரு பைக்கில் வந்த 25 வயது வாலிபர் நவீன்குமாரை வழிமறித்து, “ அந்த வாலிபர் தன்னை போலீஸ் எனவும், காங்கேயம் குற்றப்பிரிவில் வேலை பார்ப்பதாக கூறி நவீன்குமார் ஓட்டி வந்த பைக்கிற்க்கு ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதத்தில் அந்த வாலிபர் நவீன் குமாரை தாக்கி, அவரிடம் இருந்த செல்போன், ரூ. 5400 மற்றும்பைக்கின் சாவி ஆகியவற்றை பறித்துள்ளார். இதனால் வாலிபர் மீது சந்தேகம் அடைந்த நவீன்குமார் காங்கேயம் போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நவீன்குமார் கூறிய அடையாளங்களை கொண்டு, செல்போன், பணம் பறித்த ஆசாமி காங்கேயம் ஓலப்பாளையத்தை சேர்ந்த அன்பழகன்@ போலீஸ் அன்பு (25) என்பதும், இவர் காங்கேயம் போலீஸ் குற்றப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு உதவியாக போலீஸ் நண்பராக இருந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் காங்கேயம் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக இரவு நேரங்களில் தனியாக பைக்கில் வருபவர்களை மடக்கி போலீஸ் எனக் கூறி பணம் பறித்து வந்ததும், மளிகை கடைகளில் சோதனை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் அன்புவை கைது செய்த போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.