திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றங்கரை, மது அருந்தும் இடமாக மாறி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். துணி துவைக்கவும், குளிக்கவும் வரும் மக்கள் இதனால் கடும் பாதிப்பு அடைந்து வருவதாகக் கூறியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட கணியூர் காவல்துறையினர் இப்பணியில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.