தாராபுரம் பெண் மீது தாக்குதல் -தவெக நிர்வாகி மீது புகார்!

73பார்த்தது
திருப்பூர் தாராபுரம் அருகே குள்ள காளிபாளையத்தைச் சேர்ந்த லதா, தனியார் உணவகத்தில் பணிபுரிகிறார். அங்கு சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி, தவெக நிர்வாகி ஹரிகரன் அவரை தகாத வார்த்தையில் திட்டி, கன்னத்தில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த லதா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி