மடத்துக்குளம் பகுதியில் தேங்காய் பருப்பு ஏலம்

79பார்த்தது
மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 28 விவசாயிகள் கொண்டு வந்த 2300 கிலோ பருப்பு, 11 வியாபாரிகளால் பங்கேற்கப்பட்டது. தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ. 148 முதல் ரூ. 200 வரை விற்பனையானது. சராசரியாக ரூ. 176 விலைக்கு விற்றதில் மொத்தம் ரூ. 3,81,938 வர்த்தகம் நடைபெற்றது.