திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இநாம் திட்டத்தின் கீழ் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 16 விவசாயிகள் கொண்டு வந்த 1,582 கிலோ எடையுள்ள 3,504 தேங்காய்களை 6 வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ. 67.50, குறைந்தபட்சமாக ரூ. 60 மற்றும் சராசரியாக ரூ. 64-க்கு விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சத்து 1587 என அதிகாரிகள் தெரிவித்தனர்.