திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இநாம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில், 12 விவசாயிகள் கொண்டு வந்த 2218 கிலோ எடையுள்ள 5544 தேங்காய்கள் 5 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டன. ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ. 54.50க்கும், குறைந்தபட்சமாக ரூ. 41க்கும், சராசரியாக ரூ. 50க்கும் விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1,05,743 என அதிகாரிகள் தெரிவித்தனர்.