திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (26-5-26) நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்திற்கு 22 விவசாயிகள் 1780 கிலோ தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். இதில் 9 வியாபாரிகள் பங்கேற்றனர். தரத்திற்கேற்ப அதிகபட்ச விலையாக ரூ. 135, குறைந்தபட்ச விலையாக ரூ. 117, சராசரி விலையாக ரூ. 129 என நிர்ணயிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 420 என அதிகாரிகள் தெரிவித்தனர்.