திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழவு பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. தற்போது அறைகுறையாக தூர்வாரப்பட்டதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறாததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.