திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரகம், தளிஞ்சி வயல், கோடந்தூர், ஆட்டுமலை போன்ற மலைவாழ் குடியிருப்புகளில், மடத்துக்குளம் பகுதி திமுக வேட்பாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வில் உடுமலை தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.