திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருப்பூர் தெற்கு மாவட்ட
திமுக அலுவலகத்தில் இன்று மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல்
முடிவுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வழக்கறிஞர் தாயகம் கவி கலந்து கொண்டார். மேலும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், தொகுதி பார்வையாளர் சாதிக் பாச்சா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.