திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேருந்து நிலையம் பகுதியில் தமிழக முதல்வர் மகளிர் உரிமைத் தொகை 5 ஆயிரம் ரூபாய் வழங்கியதை முன்னிட்டு, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் தங்கராஜ், செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், துணைச் செயலாளர் பாலமுரளி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.