மடத்துக்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

1521பார்த்தது
மடத்துக்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் அடுத்த மயிலாபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதான விவசாயி நாச்சிமுத்து, தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிணற்றைச் சுற்றி வேலை செய்துகொண்டிருந்தபோது தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நாச்சிமுத்து உடலை மீட்டெடுத்து, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குமரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி