மடத்துக்குளம் அருகே விவசாயிகள் சாலை மறியல்

4பார்த்தது
மடத்துக்குளம் அருகே விவசாயிகள் சாலை மறியல்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி பிஏபி கிளை வாய்க்காலில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அரசு நிதி ஒதுக்கியும் பணிகள் மேற்கொள்ளாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகக் கூறி, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூளவாடி-மெட்ராத்தி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி