திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ருத்ரா பாளையம் பகுதியில் நிலத் தகராறு காரணமாக ஒரு தரப்பினர் வெளியாட்களை அழைத்து வந்து வீட்டை சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், உடுமலையைச் சேர்ந்த கலைவாணன், விக்னேஷ், பிரவீன் குமார், முத்துப்பாண்டி, அருண்குமார் ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.