மடத்துக்குளம் அருகே ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் பகுதியில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோயிலில் 12 ஆம் ஆண்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஆகம விதிகளின்படி சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு, பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி முதல் 24 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளதால், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி