திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் அரசு மதுபான கடை பகுதியில் முறைகேடாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், மது விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 26 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.