திருப்பூர் மடத்துக்குளம் பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், விவசாயிகள் கேட்கும் உரங்களை மட்டுமே வழங்க வேண்டும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேறு உரங்களை வாங்கினால் மட்டுமே குறிப்பிட்ட உரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கக் கூடாது என்றும், உர விற்பனையில் முறைகேடு குறித்த புகார்கள் வந்தால் உரிய விசாரணை நடத்தி உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.