மடத்துக்குளம் தாலுகாவில் 50% மின் ஊழியர்கள் மட்டுமே இருப்பதால், மின் பழுதுகளை சரி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மின்வாரியம் உடனடியாக ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தடையற்ற மின்சாரம் வழங்காவிட்டால், அலுவலக முற்றுகைப்
போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.