மடத்துக்குளம்: வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கோரிக்கை

710பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஓன்றியம் பெரிய வாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழைக்குப் பிறகு நீர் வளம் பெருகியதால் விவசாயிகள் கூடுதலாக சாகுபடி செய்துள்ளனர். மார்ச் இறுதியில் அறுவடை துவங்க வாய்ப்புள்ளது. தற்சமயம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 10 முதல் 25 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. ஏற்றுமதி வெகுவாக குறைந்ததால் விலை குறைந்துள்ளதாகவும், அறுவடை காலத்தில் மாநிலம் முழுவதும் உற்பத்தியைக் கணக்கிட்டு ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி