திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மடத்துக்குளம் வட்டக்கிளை துணைத் தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார்.