திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்காச்சோளம் பிரதான பயிராக உள்ளது. ஏக்கருக்கு 50 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ள விவசாயிகள், தற்போது படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை வேளாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவித்தும், உரிய ஆலோசனைகளும் நிவாரணமும் வழங்க அலட்சியம் காட்டுவதாகக் கூறி, மாவட்ட ஆட்சியாளருக்குப் புகார் அளித்துள்ளனர்.