திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் சாகுபடி செய்து வரும் விவசாயிகள், ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கும் பயன்பெறும் வகையில் மக்காச்சோள செயல் விளக்க திடல் அமைக்க வேளாண்மைத் துறை மானியம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மானியம் மூலம் சிறு விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.