மடத்துக்குளம்: குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியம்

0பார்த்தது
மடத்துக்குளம்: குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு பகுதியில் திருமூர்த்திமலை கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், உடைப்பை சரி செய்வதில் அலட்சியம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி