திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் செடி கொடிகள் படர்ந்துள்ளன. மேலும், கைப்பிடி சுவர்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தப் பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் பாலத்தை உடனடியாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.