திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில், தேசிய நெடுஞ்சாலையில் நால்வரோடு மேல்புறம், டெம்போ ஸ்டாண்ட் எதிர்புறம் சாலையில் மிகப்பெரிய அளவில் சேதம் மற்றும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்புகள் ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.