மடத்துக்குளம்: முறைகேடாக பதித்த குழாய் அகற்றம்!

3பார்த்தது
மடத்துக்குளம்: முறைகேடாக பதித்த குழாய் அகற்றம்!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி பழைய ஆயக்கட்டு கடத்தூர் ராஜவாய்க்காலில் சட்டவிரோதமாக குழாய்கள் அமைத்து பாசன நீர் திருடப்படுவதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் குணசேகரன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, கால்வாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் அகற்றப்பட்டன. மேலும், பாசன நிலங்கள் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக கொண்டு செல்லப்படும் நீர் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி