திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ருத்ரா பாளையம், கொழுமம் பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் மையத்தில் மழையால் நனைந்து சேதமடைந்துள்ளன. சுமார் 200 மூட்டை நெல் வீணாகி, சில மூட்டைகளில் நெல் முளைவிடத் தொடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.