மடத்துக்குளம் பகுதியில் அச்சு வெல்லம் விலை வீழ்ச்சி

838பார்த்தது
மடத்துக்குளம் பகுதியில் அச்சு வெல்லம் விலை வீழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கரும்பு சாகுபடி மற்றும் அச்சு வெல்லம் தயாரிப்பு பிரதானமாக உள்ளது. தற்சமயம் தேவை குறைந்துள்ளதால் அச்சு வெல்லத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த வாரம் 30 கிலோ கொண்ட சிற்பம் ரூ. 1550க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ. 1350க்கு விற்பனையானது. இந்த விலை வீழ்ச்சியால் சொந்தமாக ஆலை நடத்தும் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, அரசு வெல்லத்திற்கு உரிய ஆதார விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி