திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், இரண்டு நாட்களுக்குள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.