திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தாந்தோணி ஊராட்சி பகுதியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் தலைமையில் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.