திருப்பூர்: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொலைபேசியில் ஆறுதல்

65பார்த்தது
திருப்பூர்: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொலைபேசியில் ஆறுதல்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த  பள்ளி தாளாளர் மூர்த்தி மகள் நேற்று (ஜூன் 5) பெங்களூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இன்று அஞ்சலிக்காக மடத்துக்குளம் அருகே மைவாடியில் உள்ள பள்ளியில் காமாட்சி தேவியின் உடல் வைக்கப்பட்டது. 

அப்போது திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் மற்றும் உடுமலை நகர பாஜக தலைவர் பாலகுரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது தொலைபேசி வழியாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் கூறினார்

தொடர்புடைய செய்தி