திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவைத் தொடர்ந்து, உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 12 லட்சத்து 49 ஆயிரத்து 628 ரூபாய் ரொக்கமாகவும், 16.360 கிராம் தங்கமும், 89.90 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றது.