உடுமலைப்பேட்டை: சுடுகாட்டு பாதை சீரமைக்கக் கோரி மக்கள் போராட்டம்

1517பார்த்தது
உடுமலைப்பேட்டை ஜல்லிப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை மோசமான நிலையில் உள்ளதால், இறந்தவர்களின் உடல்களை தோளில் சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கிராம சபை கூட்டங்கள் மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். உடனடியாகப் பாதையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.