திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலாபுரம் காந்தி வீதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் தனது மளிகைக் கடையில் பொருட்களைப் பதுக்கி விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், கடையில் இருந்த கால் கிலோ புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், கருப்புசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.